செய்திகள்

சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கரடிக்கல் அனுப்பம்பட்டியை சேர்ந்தவர் பரமன் மகன் அழகுப்பாண்டி(30) மதுரை ஆய்தப்படையில் காவலராக பணிபுரியும் இவர் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கரடிக்கல்லில் இருந்து. திருப்பரங்குன்றம் நோக்கி இரவு பணிக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்த போது தனக்கன்குளம் தென்பலஞ்சி சாலை திலகா பேக்கரி அருகில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது பாலமேட்டில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற சொகுசு கார் மோதியதில் அழகுப்பாண்டி தூக்கி வீசப்பட்டார் உடனடியாக 108 அவசரகால தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசர ஊர்தி அவரை பரிசோதித்த போது சம்பவ இடத்திலேயே பலியானார். தெரியவந்தது இதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வாரத்தில் இரண்டு போலீசார் விபத்தில் இறந்தது காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button