சோழிங்கநல்லூர் அருகே இளம்பெண்ணின் கைப்பையை பறித்துச் சென்றதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரவீனா வயது 27 இவர் சோழிங்கநல்லூரில் உள்ள குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். சோழிங்கநல்லூர் சர்வீஸ் சாலையில் இவர் நடந்து சென்றபோது இவரை பின்தொடர்ந்த 2 இளைஞர்கள் அவர் கைப்பையை பறித்துச் சென்றுள்ளனர்.
அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் மற்றும் அடையாள அட்டைகள் இருந்துள்ளது. பதற்றமடைந்த ரவீனா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த செம்மஞ்சேரி போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டது கண்ணகி நகரை சேர்ந்த அஜய்(19) அஜித்(19) என்பது தெரியவந்தது பின்னர் கைது செய்த போலீசார் விசாரணையில்
நண்பர்களான இவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, ஹேண்ட் பேக் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
செய்திகள் : ரமேஷ், சோழிங்கநல்லூர்