ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து கொண்டும், கட்டிட வேலை செய்தும் வருகிறார்.
இவருக்கு மனைவி மல்லிகா, மகன் செந்தில்குமார் மற்றும் மகள் ஒருவர் உள்ளனர், அர்ஜுனுக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், அவர் அதே பகுதியில் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மகன் செந்தில்குமார் அடிக்கடி தனது தந்தையுடன் சண்டையிட்டு உள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் தனது சொத்துக்களை கள்ளக்காதலிக்கு எழுதி வைக்கப்போவதாக மகன் செந்திலுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில் வேம்பத்தி தனியார் பள்ளி அருகே அர்ஜுனன் நின்று கொண்டிருந்தபோது வாக்குவாததில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் செந்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்., இதில் படுகாயமடைந்த அர்ஜூன் பரிதாபமாக பலியானார்.iத்னை தொடர்ந்து ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்ததுடன் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.