செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கேள்விக்குறியாகும் கடனாநதி அணையின் பாதுகாப்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணைப்பகுதி அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் நேற்றிரவு சிவகாசியை சேர்ந்த வாசுதேவன் என்ற சாமியார் அவரது மகன், மருமகள் மற்றும் பேரன், பேத்தி என சுமார் 6 பேர் நின்றுள்ளனர். இதனைகண்ட அப்பகுதியினர் அவர் நரபலி தான் கொடுக்க வந்துள்ளனர் என கருதி பிடித்து நள்ளிரவில் ஆழ்வார்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடனாநதியின் பாதுகாக்கப்பட்ட அணைப்பகுதியில் கொரானா தொற்று காரணமாக பகல் நேரங்களில் கூட யாரையும் அனுமதிக்கக் கூடாது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அணைப்பகுதியின் கதவுகள் இந்த சாமியார் கும்பலுக்கு நள்ளிரவு நேரத்தில் எவ்வாறு திறந்து விடப்பட்டது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button