செய்திகள்

சங்கரன்கோவில் டிஎஸ்பியின் செயல், குவியும் பாராட்டு

சங்கரன்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வந்த டாக்ஸி ஸ்டாண்ட் திருவேங்கடம் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இது சங்கரன்கோவில் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சங்கரன்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக ராஜபாளையம் சாலையில் டாக்சி ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. சங்கரன்கோவில் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கம் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி உருவாகியது. இதன் காரணமாக பலமுறை டாக்ஸி ஸ்டாண்ட் இடமாற்றம் செய்து
போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட போது பேச்சு வார்த்தை தோல்வியிலே முடிந்துள்ளது.

இந்நிலையில் சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் டாக்ஸி ஸ்டாண்டை திருவேங்கடம் சாலையில் உள்ள புதிய நகராட்சி அலுவலகம் அருகில் இடமாற்றம் செய்ய முடிவு செய்தார்.

இது தொடர்பாக மற்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் டாக்சி ஸ்டாண்ட் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பேச்சு வார்த்தையில் டிஎஸ்பி ஜாகீர் உசேன் அவர்களின் சீறிய முயற்சியில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் திருவேங்கடம் சாலைக்கு டாக்சி ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக ராஜபாளையம் சாலையில் இயங்கி வந்த டாக்ஸி ஸ்டாண்ட் டி.எஸ்.பி. ஜாகிர் உசேன் அவர்களின் முயற்சியால் திருவேங்கடம் சாலைக்கு மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் டிஎஸ்பி ஜாகீர் உசேன் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நேற்று முன் தினம் திருவேங்கடம் சாலையில் புதிய டாக்சி ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில் டாக்சி டிரைவர்கள் சங்க தலைவர் கடற்கறை பண்டியன், பொருளாளர் ரசூல்மை தீன், சங்கரன்கோவில் டி.எஸ்.பி ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்சி ஸ்டாண்டை திறந்து வைத்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், நகராட்சி ஆணையர் சாந்தி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்ணன், ராஜன் சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் ராஜா, போக்குவரத்து காவர் ஆய்வாளர் சந்தன குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button