சென்னை நீலாங்கரையை சேர்ந்த பசுபதி என்பவர் மாணவர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பியதால் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த பாலவாக்கத்தில் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக, தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.. இதில் ஒரு மாணவனது வாட்ஸ்அப் நம்பரிலிருந்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பின்னர், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்பொழுது தன்னுடைய தாத்தாவின் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளார்.. இதனை அறிந்த மாணவனின் சித்தப்பா பசுபதி என்பவர் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியது வந்தது.. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.