மாணவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. தேர்வு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன; ஒரு தேர்வு உங்கள் உயிரை விட பெரிதல்ல. நானும் பல்வேறு தேர்வுக்களில் தோல்வி அடைந்துள்ளேன். மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்கள் கூட மனம் விட்டு பேசுமாறு மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பயம், கவலை, வேதனை, விரக்தி இவை அனைத்தும் சிறிது நேரத்தில் மறையும் விஷயங்கள். தற்கொலை செய்து கொள்வது உங்களை பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மாணவர்களை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கின்றோம். நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயித்து விடலாம். அச்சமில்லை… அச்சமில்லை… அச்சம் என்பது இல்லையே என்று மாணவர்களுக்கு நடிகை சூர்யா அறிவுரை கூறினார்.