தமது தாய், தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் தமக்கு ஒரு இடம் பிடித்து இருப்பவர் நடிகர் விஜய். முன்னணி நடிகரான இவரது படங்கள் அதிக லாபத்தை ஈட்டி தருவது திரையுலகில் தெரிந்த ஒன்று. இப்போது பீஸ்ட் படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் விஜய்.
இந் நிலையில் தனது தாய் ஷோபா, தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தனது பெயர், ரசிகர் மன்றத்தில் பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளன. தமது பெற்றோர் கூட தமது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் விஜய் வழக்கு தொடுத்திருப்பது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த திரையுலகத்தையும் பரபரப்பாக்கி இருக்கிறது.