சென்னை அம்பத்தூர் அடுத்த கொராட்டூர் அக்ரஹாரம் என்ற பகுதியை சேர்ந்தவர் குமார். 40 வயது நிறைந்த இவர் பெயிண்டராக உள்ளார்.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் குமார் வேலை முடிந்து குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
துர்கா வீட்டில் மீன் குழம்பு சமைத்து வைத்துள்ளார். இதனைக் கண்டு குமார் கிருத்திகை அன்று ஏன் மீன் குழம்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு ராடால் துர்காவை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சரிந்து விழுந்துள்ளார்.
இந்நிலையில் மூச்சு பேச்சில்லாமல் கிடந்த துர்காவை கண்டு இறந்து போனதாக எண்ணி பயந்துபோன குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற மகன்கள் வீடு திரும்பி பார்த்து போது, அம்மா மற்றும் அப்பா இருக்கும் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துர்காவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன்கள் இருவரும் கதறித் துடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.