புவி வெப்பமயமாதலை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2060களில் மிகப்பெரிய அளவில் காலநிலை ஆபத்துகள் நேரலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . அட்லாண்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் வேகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் .
இதேநிலை தொடர்ந்தால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது என எச்சரிக்கின்றனர் . 2060 – களில் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் மிக மோசமான வானிலை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர் .
தேசிய அறிவியல் செயல்முறைகள் அகாடமியில் வெளியான ஆய்வுக்கட்டுரையின்படி கடும் வறட்சி , வெள்ளம் , மோசமான வானிலை ஆகியவை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிகப்பெரிய சமூக தாக்கங்கள் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களை நன்கு புரிந்து கொள்ள முயற்சி எடுப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து பகுதியில் சுமார் 300 முதல் 1000 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு தோண்டி, கிட்டத்தட்ட 50 வகையான பனிக்கட்டிகளின் மாதிரிகளை இந்த ஆய்வுக்காக சேகரித்துள்ளனர்.
பழைய பனிக்கட்டிகளின் மாதிரியைப் பயன்படுத்தி வடக்கு அட்லாண்டிக்கின் காற்றழுத்தம் விளைவுகளை அறிந்த அவர்கள், இயற்கை மாறுபாடு முடிந்தளவுக்கு மனிதனால் ஏற்படுத்தப்படும் புவி வெப்பமயமாதலை அப்பகுதி பாதுகாத்து இருப்பதையும் உறுதி செய்தனர்.