சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதவிர அயலான், டான், சிங்கப்பாதை உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தான் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற கார்ட்டூனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘டாக்டர் படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாவது தயாரிப்பாளர் எடுத்த முடிவு. தியேட்டரில் படம் வர வேண்டும் என்பது தான் எனது ஆசையும். எது சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் கூறியிருந்தேன். தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகாமல் தியேட்டரில் வெளியாவது சந்தோஷம் தான்.
தற்போது நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாய்சேகர் படம் சூட்டிங் முடிந்து தயாராக உள்ளது. நடிகர் வடிவேலுவிடம் சதீஷ் இதுகுறித்து பேசியுள்ளார். ‘சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைட்டில் தேவைப்படுகிறது. ஆனால் வடிவேலுவிற்கு அது தேவைப்படாது. எந்த தலைப்பு வைத்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் நாய் சேகர் என்ற தலைப்பு வடிவேலுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும், அந்த தலைப்பில் அவரை தவிர வேறு யாரையும் பார்க்க இயலாது என கூறி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியுள்ளது சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படம் வெளியானால் மட்டுமே அந்த தலைப்பு பொருத்தமாக உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும்.