சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெரும்படையுடன் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றத்திற்கு உட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட தனது ஆதரவாளார்கள் பெரும் படையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பிரியா இன்று சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்
அதிக அளவிலான மக்கள் கூடியதால் காவல்துறையினர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியை சுற்றி 100 மீட்டருக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.