செய்திகள்

25ம் தேதி வரை கடும் மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை இடி மின்னலுடன்‌ கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று வேலூர்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை, திருவள்ளூர்‌, வேலூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌ , கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

வரும் 24,25 ஆகிய தேதிகளில் கடலூர்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கான எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button