திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி டாஸ்மாக் அருகே பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிர்மலாதேவி என்பவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கொலையுண்ட பெண்ணின் தலையை தேடினர்.
அப்போது திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே பசுபதி பாண்டியனின் வீட்டருகே பெண்ணின் தலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் எஸ்.பி., சீனிவாசன், டிஐஜி விஜயகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு பெருமாள் என்ற கணவரும், 2 மகன்களும் உள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.