கண்டனர் பெட்டி தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே ஒருவர் பலி.உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் அமைதி.
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
16.09.2021 அன்று தூத்துக்குடி சுந்தரவேலுபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. ல் சுந்தரவேலுபுரம் 2-வது தெருவின் மேற்கு பகுதியில் பாதாள சாக்கடைக்கென குழிக்குள் கம்பி கட்டும் பணியில் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் குழி தோண்டுகையில் வாகன நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பலமிழந்து குழிக்குள் பணிசெய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளிகள் மீது சரிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடுத்த பகுதியாக
தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனை அருகில்
ஸ்மார்ட் சிட்டி சாலை வேலை நடைபெற்று கொண்டிருக்கும் போது ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கன்டெய்னர் பெட்டி நகர்த்தும் போது மின்சார வயரில் உரசியதால் கண்டனர் பெட்டி தவறி விழுந்ததில் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த நாதன் என்பவர் சம்பவ இடத்திலே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜோயல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்க பட்டுள்ளார்.
சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி கணேஷ் மத்திய பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்