விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி சிவகாசி நகராட்சி மற்றும் ஊரக பகுதி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் இருந்த மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி துறை ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டதில் அழுகிய மற்றும் பயன்பாட்டுக்கு உகந்தது அல்லாத மீன்கள் 80 கிலோ வரை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் முன்னிலையில் பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் மீன்வளத் துறையின் மண்டல இயக்குனர் திருமதி பிரபாவதி விருதுநகர் மாவட்ட உதவி இயக்குனர் திரு ராஜேந்திரன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திரு ராஜா முத்து சிவகாசி திருத்தங்கல் நகராட்சி மற்றும் சிவகாசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி திரு வெங்கடேஷ் சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து மற்றும் துப்பரவு ஆய்வாளர் திரு சித்திக் திரு சுரேஷ் திரு பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் ரசாயனம் கலக்காத தரமான மீன்கள் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டது தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
விசில் செய்திகளுக்காக ஏ சாகுல் ஹமீத் சிவகாசி