ராம் சரண் நடிப்பில் பான் – இந்தியா திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இதன் பூஜை மற்றும் தொடக்கவிழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.
தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் உள்பட பலர் நடிக்கின்றனர். அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். அவரது 50 வது படம் என்பதால் மிகப்பிரமாண்டமாக இந்தப் படத்தை எடுக்கிறார்.
ஷங்கர் படங்களில் ஹைலைட்டாக இருப்பவை பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும். சண்டைக் காட்சியை படமாக்க பல வாரங்களை அவர் எடுத்துக் கொள்வது உண்டு. எந்திரன் படத்தின் ட்ரெயின் சண்டைக் காட்சியைப் போல் பிரமாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ராம் சரண் படத்துக்காக எடுக்க, ஷங்கர் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சண்டைக் காட்சிக்காக மட்டும் 10 கோடிகள் செலவு செய்ய உள்ளதாகவும் ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஒருகாலத்தில் இந்தியாவின் பிரமாண்ட படங்களின் பிதாமகனாக ஷங்கர் இருந்தார். பாகுபலிக்குப் பிறகு அந்த இடத்தை ராஜமௌலி பிடித்துக் கொண்டார். 2.0 படத்தால் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்க முடியவில்லை. அதன் அருகில் செல்லவும் முடியவில்லை என்பதே உண்மை. இந்நிலையில், ராஜமௌலியின் ஏரியாவான தெலுங்குக்கே சென்று படம் பண்ணுகிறார். வசூல் சாதனை படைத்தால்தான் மரியாதை என்ற நிலையில், படத்தை மிகப்பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன் சான்றுதான் பத்து கோடியில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பைட் சீன்.
ராம் சரண் படத்தின் முதல் ஷெட்யூல்டில் இந்த ஆக்ஷன் காட்சி எடுக்கப்பட அதிக சாத்தியமுள்ளதாக கூறப்படுகிறது