தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரப்பரப்பும், அதிர்ச்சியும் உருவாகியுள்ளது. மதியம் 23 வயதான ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஸ்வேதாவை ராமு என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.
உடனே அந்த இளைஞரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் . அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். ராமுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதே போல் ஒரு சம்பவம் 2016ல் சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.