சீனாவில் நடைபெற்ற திருமண விழாவில் சீனர் ஒருவர் தர்மதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே என்ற பாடலை வேற லெவலில் பாடி அசத்தியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்மதுரை. இத்திரைப்படத்தில்,விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என ஏராளமானோர் நடித்திருந்தனர்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் கொடுத்துள்ளன. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டிபட்டி கனவா காத்து ஆள தூக்குதே’ என்ற பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சீனர் ஒருவர் அழகாக பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளார்.
அந்த சீனர் பாடலை பாட பாட அங்கு இருந்தவர்கள் குஷியில் ஆட்டம் போட்டனர். இந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமிழில் பாட்டுப்பாடி அசத்திய அந்த சீனரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அப்லாஸ் கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சீனாவில் தமிழ் பாடலை பாடி மாஸ் காட்டிய சீனரின் வீடியோவுக்கு எக்கச்சக்க லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்த வீடியோ கடந்த 2017ம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.