தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வலிமை’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் வீடியோ வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. தல அஜித்தின் அதிரடி பைக் சேஸிங் காட்சிகள், ஹாலிவுட் படத்திற்கு இணையான ஆக்சன் காட்சிகள், ‘நாம் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி’ என்ற அஜித்தின் வசனம், ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. மேலும் இந்த வீடியோவில், ‘நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள், இருள் வலைதான் எங்கள் உலகு, அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்? என்ற வசனம் படம் ரிலீஸாகும் வரை வைரலாகும். இந்த வீடியோ தற்போது இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பதும், இது குறித்த ஹேஷ்டேஎக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.