நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை.
அதிமுகவில் விசுவாசமாக இருந்தால் தொண்டன்கூட முதல்வராக முடியும். விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.