தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்படுள்ளதற்கு விவேக் மகள் நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கொடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும், 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்திற்காக நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது.
இதனையொட்டி, விவேக்கின் ட்விட்டர் பக்கத்தில் அவரது மகள் ‘எனது அப்பாவிற்கு ‘தாராள பிரபு’ படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி. அதனைப் பெற்று எங்கள் வீட்டில் சேர்ந்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.