செய்திகள்

கோவையில் ஞாயிறுக்களில் ஊரடங்கு கட்டுபாடு இல்லை

கோவையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளில் அடைக்க தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில்‌ உள்ள 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த சுமார்‌ 24.5 லட்சம்‌ (80 விழுக்காடுக்கு மேல்‌) பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு பிரத்யேகமாக ஞாயிற்றுகிழமைகளில்‌ அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்‌ விலக்கிகொள்ளப்படுகிறது.

மேலும்‌ தமிழக அரசால்‌ அறிக்கப்பட்டுள்ள அனைத்து தளர்வுகளுடன்‌ கூடிய கட்டுப்பாடுகள்‌ கீழ்கண்ட நெறிமுறைகளுடன்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌.

பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ பகுதிகளான வணிக வளாகங்கள்‌, திரையரங்குகள்‌, டாஸ்மாக்‌, மார்க்கெட்கள்‌, ஜவுளிக்கடைகள்‌, நகைக்கடைகள்‌ மற்றும்‌ இதர கடைகள்‌, பொழுதுபோக்கு கூடங்கள்‌, உடற்பயிற்சி கூடங்கள்‌, தனியார்‌ கேளிக்கை விடுதிகள்‌ உள்ளிட்டவற்றில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்‌.
2.மேலும்‌ வாடிக்கையாளர்கள்‌ கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ மேற்படி கடை மற்றும்‌ நிறுவன உரிமையாளர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும்‌ கடைபிடிக்கப்படுவதை மேற்படி நிறுவனம்‌/ கடைகளின்‌ உரிமையாளர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌.

3.திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ விருந்து மண்டபங்களில்‌ நடைபெறும்‌ சுப நிகழ்ச்சிகள்‌, திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ விருந்து மண்டபங்களின்‌ உரிமையாளர்கள்‌ சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌. மேலும்‌ நிகழ்ச்சிகளின்‌ போது அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும்‌ கடைபிடிக்கப்படுவதை மண்டபங்களின்‌ உரிமையாளர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌.

4, கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள்‌ அனைத்தும்‌ சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்குள்‌ வரும்‌ பயணிகள்‌ அனைவரும்‌ 72 மணி நேரத்திற்குள்‌ எடுக்கப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்‌) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன்‌ வவைத்திருக்க வேண்டும்‌.

மேற்கண்ட சான்றுகள்‌ இல்லையெனில்‌ திருப்பி அனுப்பப்படுவர்‌.

பள்ளி மற்றும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ கேரள மாநில மாணவர்கள்‌ தினம்‌ பள்ளிக்கு வந்து செல்ல அனுமதியில்லை. அம்மாணவர்களுக்கு இணைய வழியில்‌ வகுப்புகள்‌ மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும்‌, விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ கேரள மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கோவிட்யின்மை எனில்‌ மட்டுமே விடுதிக்குள்‌ அனுமதிக்கப்படுவர்‌.

கேரள மாநிலத்திலிருந்து வரும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ 10 நாட்கள்‌ தனிமைப்படுத்தப்பட வேண்டும்‌. கோவிட்‌ நோய்த்‌ தொற்று அறிகுறி ஏதேனும்‌ கண்டறியப்பட்டால்‌ அருகில்‌ உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல்‌ தெரிவித்து மருத்துவ ஆலோசனைசசிகிச்சை பெறவும்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி நிர்வாகத்திடம்‌ தெரிவிக்கப்படுகிறது.

மொத்த விற்பனை மார்கெட்டுகளில்‌ 50 சதவிகித கடைகள்‌ சுழற்சி முறையில்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்த விற்பனை நிலையங்களில்‌ சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை.

பொள்ளாச்சி மாட்டுச்‌ சந்தை உள்ளூர்‌ வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில்‌ வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்‌ கலந்துக்கொள்ளாமல்‌ இருப்பதை சார்‌ ஆட்சியர்‌/ பொள்ளாச்சி நகராட்சி ஆணையர்‌ உறுதிபடுத்தவேண்டும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button