ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது போட்டியில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஷார்ஷாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். படிக்கல் அதிகபட்சமாக 70 ரன்களை விளாசினார். கோலி 53 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் டுவெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தக்கூர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் வந்த
இதனை தொடர்ந்து, 157 என்ற வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டுபிளஸிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. ருத்துராஜ் 38 ரன்னிலும், டூபிளஸிஸ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து, வந்த அம்பத்தி ராயுடு 32 ரன்களை எடுத்தார். இறுதியில் சென்னை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்களுடனும், கேப்டன் தோனி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் சென்னை அணி 7 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. 7 வெற்றிகளை பெற்றிருந்த போதும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.