தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையை தூய்மைப்படுத்தும் பணிகளை பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் மழைக் காலத்திற்கு முன்பாக மழைநீர் கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்டவை தூர்வார வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ஓடை மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன அந்த வகையில் தூத்துக்குடி மாநகரின் மத்தியில் இருக்கக்கூடிய பக்கிள் ஓடை தூய்மைப்படுத்தும் பணி இயந்திரங்களுடன் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் தொடர்ந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கிள் ஓடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி மழைக்காலத்துக்கு முன்பாக தூர் வார வேண்டும் என்ற வகையில் பக்கிள் ஓடை முழுவதும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது பககிள் ஓடையில் மட்டும் 12 இயந்திரங்கள் மூலமாக சுமார் 200 பேர் இந்த தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் மேலும் மாநகரம் முழுவதும் சுமார் 5000 பேர் தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் ஒரு வார காலமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த கனிமொழி எம்பி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் மழைக் காலத்திற்கு முன்பாக நிறைவு செய்யும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும் உள்ளது என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதைத்தொடர்ந்து திரவியபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்துவைத்து அங்கு மரக்கன்றுகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நடத்தினர்
பேட்டி: கனிமொழி எம்பி