சென்னையில் உள்ள மயிலாப்பூர் அபிராமிபுரம் பகுதியில் உள்ள அபிராமிபுரம் காவல் நிலையத்திற்கு வந்த கார்த்திக் என்ற பழைய ரௌடி குற்றவாளி, நேற்று இரவு பணியில் இருந்த காவல் அதிகாரியான சதீஷ் குமாரை கொலை செய்திடுவதாக மிரட்டி இருக்கிறார்.
மதுபோதையில் காவல் நிலையத்திற்கு கையில் பிளேடுடன் வந்த ரௌடி கார்த்திக், காவல் அதிகாரி சதீஷ் குமாரை மிரட்டி இருக்கிறான். இந்த மிரட்டல் பேச்சுக்களை சக காவல் துறை அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
காவல் அதிகாரிகளும் ரௌடியை சமாதானப்படுத்த, போதையில் இருந்த கார்த்திக் ” யூனிபாமை கழட்டி வச்சிட்டு வாடா., சண்டை போடலாம்.. வெளியே வந்த கழுத்தை அறுத்துடுவேன் ” என்று மிரட்டி இருக்கிறான். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் வீடியோ செல்ல, அவர்கள் கார்த்திகையை கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, காவல் துறையினர் கார்த்தியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவே, இதனை அறிந்துகொண்ட அவன் தலைமறைவாகி இருக்கிறான். இதனால் அவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக ஸ்டார்மிங் என்ற அதிரடி திட்டம் மூலமாக கடந்த 3 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த பரபரப்பு சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.