அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,580 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 629 ஆகவும் பதிவாகி இருந்தது.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,236. உலகம் முழுவதும் கொரோனாவால் நேற்று மட்டும் 5,200 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4,56,724 பேர் மீண்டனர். அமெரிக்காவில் நேற்று 73,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் நேற்று 629 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 37,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. துருக்கியில் 27,188, ரஷ்யாவில் 22,236, பிலிப்பைன்ஸில் 18,319 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலக அளவில் ரஷ்யாவில்தான் நேற்று கொரோனாவால் அதிக மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
ரஷ்யாவில் நேற்று மட்டும் 779 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 629 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ஈரானில் 289, மலேசியாவில் 258, பிரேசிலில் 206 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,905 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 181 என நீண்ட காலத்துக்குப் பிறகு குறைந்துள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
கேரளாவில் நேற்று 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கேரளாவில் நேற்று கொரோனாவுக்கு 58 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 2,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் நேற்று 32 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் நேற்று 1657 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19 ஆக பதிவாகி இருந்தது.
கர்நாடகாவில் 504 பேருக்கும் ஆந்திராவில் 618 பேருக்கும் மேற்கு வங்கத்தில் 472 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் 444 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.