செக்-அப் செய்வதற்காக கிளினிக்கிற்கு வந்திருந்த பெண்ணின் ட்ரவுசரை கழட்டி, அவரின் மர்ம உறுப்பை தொட முயன்ற மருத்துவரை, அப்பெண்ணின் கணவர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீசே திருட்டி ஈடுபடுவது, கண்ணியம் காக்க வேண்டிய ஆசிரியரே குடித்துவிட்டு வகுப்பறையில் படுத்து தூங்குவது, பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற சம்பவங்களின் வரிசையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு தர்ம அடி வாங்கியிருக்கும் பிரபல மருத்துவர் ஒருவர் சேர்ந்திருக்கிறார்.
கோவா மாநிலம் மபுசா பகுதியில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கும் பிரபல மருத்துவர் ஒருவர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதன் காரணமாக அந்த குறிப்பிட்ட பிரபல மருத்துவரின் கிளினிக்குக்கு பரிசோதனை செய்வதற்காக தனியாக சென்றுள்ளார்.
அப்போது, அந்த கிளினிக்கில் பெண் உதவியாளர் இல்லாத நிலையில், பரிசோதனைக்காக வந்த பெண்ணை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் படுக்கை ஒன்றில் சோதனை செய்ய வேண்டும் என கூறி படுக்கச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவர்.
மதுபோதையில் பள்ளி வகுப்பறையில் படுத்துத் தூங்கிய தலைமையாசிரியர்!
பின்னர், அந்த பெண் அணிந்திருந்த ட்ரவுசரை அந்த மருத்துவர் கழற்றியிருக்கிறார். அதுவரை மருத்துவர் தனக்கு பரிசோதனை செய்வதற்காகத்தான் இப்படி செய்கிறார் என அந்த பெண் நினைத்திருந்த நேரத்தில், மருத்துவர் தனது கையை பெண்ணின் பிறப்புறுப்பை நோக்கி நகர்த்தினார். இதனால் அதிர்ந்த அப்பெண் மருத்துவரின் கையை சட்டென தட்டிவிட்டிருக்கிறார். பின்னர் மீண்டும் மருத்துவர் படுக்க சொன்ன போது சுதாரித்துக் கொண்ட அப்பெண் அங்கிருந்து வெளியேறி தனது காருக்கு சென்று அமர்ந்தார்.
500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் – ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!
அப்பெண் தனக்கு நடந்தவற்றை கண்ணீருடன் தனது கணவருக்கு போன் செய்து சொன்னதன் பேரில், அவருடைய கணவர் விரைந்து வந்து மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், காவல்நிலையம் சென்று சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
சிகிச்சைக்காக சென்ற இடத்தில் பிரபல மருத்துவர் ஒருவர் பெண்ணிடன் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.