கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும், சிலருக்கு குரல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது..
இது நம் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இந்த கொரோனாவைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்தே மக்கள் பீதியிலேயே உள்ளனர்.. காரணம் இதற்கு இதுவரை எந்தவித மருந்தும் சிகிச்சையும் இல்லாததுதான்.
இது என்ன விதமான வைரஸ் என்ற ஆராய்ச்சிகளும் கண்டுபிடித்து முடியவில்லை.. அதற்குள் வைரஸின் பல பரவல்கள் வேகமெடுத்து வருகின்றன.
இதனிடையே தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கும்கூட, சில பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மனக்கவலை, மன அழுத்தக் கோளாறு, பொதுவான மனக்கவலை பிறழ்வு, மன உளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பு, அச்சம் போன்றவைகள் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டது.
அதேபோல, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று அரிதாக ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பூஞ்சை பாதிப்பு உண்டாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. மேலும், கொரோனா தொற்று சுவாச பாதையையே பெருமளவு தாக்கினாலும் நரம்பு மண்டலத்திலும் சில பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்துகிறது.. அதனால்தான் இவர்களுக்கு மறதி அடிக்கடி ஏற்படும் என்று சொன்னார்கள்.
இப்படி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் மக்களை கலங்கடித்து வருகிறது.. இப்போது இன்னொரு உண்மை தெரியவந்துள்ளது.. கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுகிறதாம்.. அவர்கள் குரலை இழந்தும் விடுகின்றனராம்.. இது கொல்கத்தா வரை ஊடுருவியும் உள்ளது.. கொரோனா வைரஸினால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்கு தற்காலிகமாக குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுகிறது..
குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன… தொற்று பாதிப்பு ஏற்பட்டால், சுவாசப்பாதையை கடுமையாக பாதிக்கிறது.. அதனால்தான், குரல்வளை அழற்சி ஏற்படுகிறது… இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3ம் வாரம் முதல் 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்புள்ளதாம்.. திடீரென குரலை இழக்கும் இந்த நோய்க்கு கோவிட் வாய்ஸ் என்று பெயர் சொல்கிறார்கள். அதேசமயம், கொரோனாவால் இப்படி ஆவதில்லை என்றும், குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு அதன்மூலம் பேசும் திறன் இழக்க நேரிடுகிறது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.