தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடியில் சிலரிடம் வேளாண்மை துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அப்பாத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேளாண்மை துறை அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஓட்டப்பிடாரம் கல்லத்திக்கணறு பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் தினேஷ் சிங் (32) என்பவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேரந்த செந்தூர்பாண்டி மகன் பாலமுருகன் (30) என்பவரிடம் தான் வேளாண்மை துறையில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாகவும் வேளாண்மை துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி அதற்காக ரூபாய் 5 லட்சம் தந்தால் போதும் என்று ஆசை வார்த்தை கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு வெவ்வேறு தேதிகளில் ரூபாய் 4,70,000/- பணம் வாங்கி கொண்டு ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து விடும் என்று கூறி ஏமாற்றியுள்ளதும், இதே போன்று கல்லத்திக்கிணறு வடக்கு காலனியைச் சேர்ந்த ராசையா என்பவரிடமும் அவரது மகளுக்கு வேளாண்மை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,10,000/- பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்படி தினேஷ் சிங் என்பவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.