செய்திகள்

அடப்பாவிங்களா!! சாப்பாட்டுல வெடிகுண்டு வச்சுருக்கிங்க!! சிவகிரி அருகே விலங்குகளை வேட்டையாடிய கும்பல் கைது

சிவகிரி அருகே பழங்களில் குண்டு வைத்து காட்டுப்பன்றி மற்றும் 3 மான்களை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர் கூட்டாளிகள் 4 பேரைத் தேடிவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் , சிவகிரி வனச்சரகம் சிவகிரி காப்புக்காடு , சிவகிரி தெற்குப்பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்கைக்குட்பட்ட ராசிங்கப்பேரி கண்மாயில் சிலர் , குண்டுகள் வைத்து காட்டுப் பன்றி மற்றும் மான்களை வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் , வாசுதேவநல்லூர் பிரிவு வனவர் உபேந்திரன் , சிவகிரி தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார் , வடக்குப் பிரிவு வனவர் மகேந்திரன் வனக்காப்பாளர்கள் சுதாகர் , இம்மானுவேல் பெருமாள் , அருள்மொழி பிரதீப் , வனக்காவலர்கள் செல்வராஜ் , மணிகண்டன் , வேட்டைத்தடுப்பு காவ லர்கள் சரவணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் தனித்தனி குழுவாக சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த கார் , பைக் ஆகியவற்றை வனத்துறையினர் நிறுத்திய போது காரில் இருந்த 4 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினர் . பைக்கில் வந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் மதன்ராஜ் ( 23 ) , காசிராமன் மகன் மகேஷ் ( 19 ) , சுந்தரராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருவையா ( 32 ) என்பது தெரியவந்தது . தொடர்ந்து கார் , பைக்கை சோதனையிட்டபோது சிதறிய நிலையில் காட்டுப்பன்றி , புள்ளிமான்களின் தலைகள் , இரண்டு துண்டுகளாக புள்ளிமான்களின் உடல்கள் இருந்தது . கொய்யா , மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து அவற்றை வேட்டையாடியதாக பிடிபட்டவர்கள் தெரிவித்தனர் . இதையடுத்து அவர்கள் வனத்துறையிடம் இருந்து ஒரு காட்டுப் பன்றி தலை , 3 புள்ளிமான் களின் உடல்கள் , தலைகள் நாட்டு வெடிகுண்டுகள் , அரிவாள் , 3 செல்போன் கள் , கார் பைக் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் . இவர்கள் பலமுறை காட் டுப்பன்றி , மான் , முள்ளம் பன்றி . சருகுமான் ஆகியவற்றை வேட்டையாடி அவற்றை சமைத்து சாப்பிட்டும் , வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது . இது குறித்து 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் , மதன் ராஜ் மகேஷ் , குருவையா ஆகிய மூவரையும் கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர் . மூவரையும் 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் . அதன்பேரில் மூவரையும் சிறையில் அடைத்த வனத்துறையினர் , தப்பியோடிய சுந்தர ராஜபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அன்பழகன் ( 32 ) , கனிய ராஜ் மகன் விஜயராஜா பழனிசாமி மகன் காசிராமன் ( 48 ) , சிவகிரி அடுத்த விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த முருகேசன் ( 56 ஆகிய 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button