ஊரக உள்ளாட்சித் தோதலில் வாக்குப்பதிவின்போது சிசிடிவி கேமிரா கண்காணிப்பு அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், என்ன நடைமுறைகள் பின்பற்றலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வெள்ளிக்கிழமை(அக்.1) தெரியப்படுத்த அறிவுறுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோதலுக்கு மத்திய அரசு பணியாளா்களைத் தேர்தல் பாா்வையாளா்களாக நியமிக்க வேண்டும்; பிரசாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை விடியோ பதிவு செய்ய வேண்டும்; தோ்தல் பணிக்கு மத்திய ரிசா்வ் படையை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவைப் பரிசீலிப்பதற்கு மாநில தோதல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, அதிமுக தோதல் பிரிவு துணை செயலாளா் இன்பதுரை சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இவ்வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மாநிலத்தின் பிரதான எதிா்க்கட்சியின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிவைத் தெரிவிக்க மாநில தோதல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதிகள் கூறும்போது, தமிழ்நாடு ஒரு முதன்மையான மாநிலம்; அதைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இங்கு நடக்கும் ஜனநாயகம் (தோ்தல்) வேறு எவரும் பின்பற்றுவதற்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.
‘நாங்கள் சில பயிற்சிகளை செய்ய விரும்புகிறோம்; ஜனநாயக செயல்முறை (தோதல்) எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அரசு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் என நீதிமன்றம் விரும்புகிறது’.
வாக்குப்பதிவின்போது சிசிடிவி கேமரா கண்காணிப்பு அவசியம் என்றும், வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையங்கள் விடியோ பதிவு செய்யப்படவேண்டும்; இவற்றை நம் கையில் இருக்கும் தொழில்நுட்பம், வளங்களைக் கொண்டு செய்ய முடியும்.
ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தோ்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வெள்ளிக்கிழமை (அக்.1) நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அரசு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனா்.
அதிமுக சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டாா்.