செய்திகள்

ஆரணியில் பள்ளி மாணவிக்கு கொரோனா : பள்ளிக்கு 3நாள் விடுமுறை

கொரானா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைந்ததால் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

மேலும் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்கவும் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ள நிலையில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளில் தினமும் 50% மாணவர்களுக்கு மட்டுமே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியுடன் அமர வைப்பது, மதிய உணவுநேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 1900 மாணவ, மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிக்கு இன்று காலை வந்த மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே கடந்த வாரம் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button