செய்திகள்தொழில்நுட்பம்

ஈஎம்ஐயில் இனி ‘ஆட்டோ டெபிட்’ முறை கிடையாது..!

வீடுகள், வாகனங்கள் உட்பட பல்வேறு தேவைக்களுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் கடன் பெற்று வருகிறார்கள்.

அந்த கடனை அடைக்கும் வகையில் மாதாமாதம் இஎம்ஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் வங்கிகளில் கிரெடிட் ஆவதால், அவர்களது இஎம்ஐக்கான பணம், அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து, கடன் கொடுத்த நிறுவனம் தானாகவே எடுத்துக்கொள்ளும் முறை இதுவரை செயலில் இருந்து.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இனிமேல் ஆட்டோ டெபிட் முறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கி, கடந்த 2009ம் ஆண்டு வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அதில், ‘டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அனைத்தும் Additional Factor Authentication’ அங்கீகாரத்தை 2021ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும்’ என அறிவித்து, காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், பல நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் கால வரையறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, ஆட்டோ டெபிட் முறைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு நாள் நேற்றுடன் (30ம் தேதி) முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அதன்படி, இன்று (1ம் தேதி) முதல் வங்கிகளுக்கான ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவணைத் தொகை எடுக்கப்படும் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமும், மின்னஞ்சல் மூலமும் வங்கிகள் தகவல் அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள், இதன் அடிப்படையில், தொகைகளை எடுக்க அனுமதி அளிக்கவும் அல்லது தொகையின் அளவை திருத்தி அமைக்கவும் வகை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அதை சரியாக கவனித்து பணம் கட்டாவிட்டால், சேவையை இழக்க நேரிடும். குறித்த தேதிக்குள் லோன் கட்டத் தவறினால் அதுக்கு வேறு அபராதம் கட்டவேண்டும். குறிப்பாக மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, லோன் கட்டி வருபவராக இருந்தால் வங்கியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button