திருவாரூர் மாவட்டத்தில் இனி பொதுஇடத்தில் மது அருந்த முடியாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொதுஇடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் மது அருந்துவோர், பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கீழ்கண்ட காவல் உதவி எண்களையும் அவர் அறிவித்துள்ளார். திருவாரூர்- 9498110861, நன்னிலம் – 9498143926, மன்னார்குடி – 9498183264, திருத்துறைப்பூண்டி – 9445407674, முத்துப்பேட்டை – 9840717894, தனிப்பிரிவு அலுவலகம் – 04366 225925, 9498100865. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு : திருவாரூர் – 830058812, நன்னிலம் – 9498175387, திருத்துறைப்பூண்டி – 9498162363. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை – 9498181220 மற்றும் ஹலோ போலீஸ் – 8300087700 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யின் இந்த அதிரடி அறிவிப்பு, மாவட்ட மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.