தென்காசி,அலங்கார்நகரை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3 வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த நம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சண்முகவள்ளி அவர்களுக்கு *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS* அவர்கள், அவரை ஊக்குவிக்கும் விதமாக தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டுச் சான்றிதழும் புத்தகமும் வழங்கினார்..மேலும் பணியில் நேர்மையுடனும் விழிப்புடனும் இருந்து திறம்பட செயல்பட்டு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
#visilmedia #todaynews #topnews #tamilnadunews #tenkasi #tamilnadu #IAS #exam #tenkasipolice