காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக். 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலா வாசிகளுக்கு திறந்துவிட போவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் குற்றால அருவிகள் திறக்க இயலாது என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை திறப்பதற்கு அனுமதி இல்லாத காரணத்தினால் கடைகள் திறக்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். மேலும்
ஆனால் கடைகளுக்கான வாடகையை உள்ளூர் நிர்வாகம் கேட்டு நச்சரிக்கின்றனர் என்று நேற்று வீடியோ ஒன்றை பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் தென்காசி மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த குற்றால ஓட்டுநர், வியாபாரிகள் சங்கங்கள் வரும் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு பெயர் பலகை ஆங்காங்கே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெயர் பலகையில் குறிப்பிட்டுள்ளதாவது, குற்றால அருவியில் குளிக்க விடாத காரணத்தினால் தேர்தலை புறக்கணிக்கிறோம். இவண் குற்றால ஓட்டுநர் சங்கம், வியாபாரிகள் சங்கம், வாடக உரிமையாளர் சங்கம்.
#visilmedia #todaynews #topnews #todaynewstamil #tnelection #coutrallam #குற்றாலம் #செய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #தேர்தல்ஆணையம்