வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதில், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் ‘மெகரசைலா.’ பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லரில் ஒய்.ஜி.மகேந்திரன் சிம்புவிடம், “என்னயா டெனெட் படம் மாதிரி போட்டு குழப்புற” என்கிறார். ‘மாநாடு’ பட டீசர் வெளியானபோது டெனெட் படத்துடன் ஒப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தன் படத்தின் மீதான விமர்சனத்தை தன் படத்திலேயே பதில் சொல்வது இயக்குநர் வெங்கட் பிரபுவின் டச் என்கிறார்கள் ரசிகர்கள்.
#visilmedia #todaynewstamil #topnews #cinema #maanaadu #simbu #maanaadutrailer #vengatprabhu #yuvanshankarraja #tamil #மாநாடு