அரபிக்கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் இன்று தீவிர புயலாக மாறும். இதனால், தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அரபிக் கடலில் உருவான ‘ஷாகீன்’ புயல் நேற்று (1ம் தேதி) காலை 5.30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கில் சுமார் 400 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கே 260 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால், மீனவர்கள் அக்டோபர் 4ம் தேதி வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது. புயல் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இன்று (2ம் தேதி) முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.