சினிமாசெய்திகள்

தீபாவளிக்கு களமிறங்கும் ‘எனிமி’ – ரஜினியுடன் மோதும் விஷால், ஆர்யா

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘எனிமி’. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடித்திருந்தனர். அவர்களின் காம்பினேஷனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் மற்றொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்‌ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார். படத்திற்கு எனிமி என பெயர் வைத்துள்ளனர். முன்னதாக படம் ஆயுதபூஜை அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த, மாநாடு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் தீபாவளி ரேஸில் பங்கேற்கும் நிலையில், எனிமி படமும் அதனுடன் இணைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

முன்னதாக எனிமி படத்தின் ‘பத்தல’ , லிட்டில் இந்தியா, டும் டும் டும் உள்ளிட்ட பாடல்கள்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல கடந்த ஜூலை மாதம் படத்தின் டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்தது. சிறையிலிருந்து தப்பிக்கும் ஆர்யாவை தனது அதிரடி ஆக்‌ஷன் மூலமாக எதிர்க்கும் நாயகனாக டீஸரில் காட்டியிருந்தனர். எனிமி படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர்.

#visilmedia #todaynewstamil #topnews #cinema #enemy #vishal #aarya #deepavali #தீபாவளி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button