முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் பலம் வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை என்றும், அவர் நடவடிக்கைகளை ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிடுகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காவல்நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அங்கு பதிவேடுகளை பார்வையிட்டார்.
குறிப்பாக “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் நிலை என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த காவல் அதிகாரிகளின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டுச் சென்றார்.
முதல்வர் ஸ்டாலினின் காவல்நிலைய ஆய்வு சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலானது. இந்நிலையில் காவல்நிலையத்தில் ஆய்வு செய்ததால் ஸ்டாலினை பலம் வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியை விட மு.க.ஸ்டாலின் பயங்கரமானவர் என்று ஹெச்.ராஜா சொல்லியதன் அர்த்தம் வேறு. கருணாநிதி தனி மனிதராக சிந்திக்கக் கூடியவர். ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள் என்று கூறினார்.
திடீரென காவல்நிலையத்திற்குள் சென்று ஆய்வு செய்ததால் முதலமைச்சர் மு.க,ஸ்டாலினை பலம் வாய்ந்த தலைவராக கருத முடியாது என்று கூறினார்.
#visilmedia #todaynewstamil #topnews #tamilnadu #mkstalin #annamalai #dmk #bjp