மேற்கு வங்கம் மாநிலம் பானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் துவக்கம் முதல் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் முதல்வராக நீடிக்க அவர் 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பபானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிக ளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பபானிப்பூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடைபெற்ற சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கையில் சுமார் 12 ஆயிரத்து 435 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் 3 ஆயிரத்து 962 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
மம்தா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர். ஒடிசாவின் பிபிலி தொகுதியிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்தொகுதி பிஜூ ஜனதா தள கட்சி எல்எல்ஏ-வாக இருந்த பிரதீப் மகாரதி மறைவை ஒட்டி, அங்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளம் சார்பில் மகாரதியின் மகன் ருத்ரபிரதாப் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் அத்தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #mamatabanerjee #westbengal