தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான பேருந்து டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான வெளியூர்காரர்கள் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்து படிப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காகவும் லட்சக்கணக்கானோர் சென்னையில் தங்கி உள்ளனர்.
வருடம் தோறும் மற்ற நாட்களை விட தீபாவளி தினத்தில் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவது வழக்கம். பேருந்தோ, ரயிலோ என்று கிடைக்கும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி சொந்த ஊருக்கு சென்றுவிடுவர்.
இந்த முறையும் தீபாவளியை (நவ.4) கொண்டாட பலரும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். அதே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் நபர்களின் வசதிக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதிலும் தமிழக இப்போதே முனைப்பாக களத்தில் இறங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ப நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு போலவே இம்முறையும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் பயணிகள் வசதிக்காக இயக்கப்படும் என்று தெரிகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #deepavali #transport #bus #holiday #tamilnadu #செய்திகள் #தீபாவளி