*தமிழக காவல் ஆய்வாளரை சுட்டுக்கொன்ற காவல் ஆய்வாளர் முனுசேகரின் காம லீலைகள்.*
தமிழக காவல்துறையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காமலீலைகளை அவ்வப்போது சில காவல் அதிகாரிகள் அரங்கேற்றி வருகின்றனர். தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக காவல் துறையில் பூதாகரமாக வெளிவந்துள்ள காம லீலை புரிந்த திருக்கழுக்குன்றம்காவல் ஆய்வாளர் முனி சேகர் குறித்த செய்தி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழக காவல்துறையில் பணிபுரிந்து தற்போது திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முனி சேகர். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர் பெரிய பாண்டி உட்பட போலீசாருடன் ராஜஸ்தான் மாநிலம் சென்றபோது உடன் வந்த பெரிய பாண்டி ஆய்வாளரை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்று விட்டனர் என்று கூறி தப்ப முயன்றார். ஆனால் பிரேத பரிசோதனையில் ஆய்வாளர் முனிசேகரின் கையில் இருந்த துப்பாக்கியில் உள்ள குண்டு உடலில் பதிந்திருந்தது. அப்போது வேறுவழியின்றி இருளில் தெரியாமல் சுட்டு விட்டதாக அன்று சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏகே விசுவநாதன் அவர்களிடம் கூறி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். ஆனால் தனது துப்பாக்கியால் சுட்டு கொன்றது தொடர்பாக உண்மையை கூறாமல் கொள்ளையர்கள் சுட்டதாக நாடகம் ஆடியதால் தென் சரகத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் தேர்தல் வந்தபோது அதை பயன்படுத்தி மீண்டும் வட சரகத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தப்பினதாக கூறப்படுகிறது. மேலும் இறந்து போன ஆய்வாளரின் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் அதனால் தண்டனையில் இருந்து தப்பிய தாகவும் கூறப்படுகிறது. தற்போது உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு மீண்டும் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில் இளம்பெண் ஒருவரிடம் வாட்ஸ்அப் காலில் மிகவும் ஆபாசமாக நிர்வாணமாக பேசும் வீடியோக்கள் வெளியாகி காவல்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடந்த 20-09-2021 அன்று இணையதளம் வழியே புகார் கொடுத்து உள்ளார். சமீப காலங்களாக பாலியல் புகார்களில் நடவடிக்கை என்பது மிகவும் கவலைக்கிடமான நிலையில் கிடப்பில் போடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காப்பாற்ற உயர் அதிகாரிகளே களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளை சார்ந்த நபர்கள் மற்றும் தங்களை விமர்சிக்கும் நபர்கள் மீது எழும் பாலியல் புகார்கள் மீது எடுக்கும் நடவடிக்கை என்பது உலகமே உற்று நோக்கும் விதத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு ஒரு படி மேலே சென்று தீவிர நடவடிக்கை எடுப்பது மட்டுமே வியப்பின் உச்சமாக உள்ளது. ஏனைய பாலியல் குற்றங்களில் நடவடிக்கை என்பது மிகவும் கவலைக்கிடமான விதத்தில் சென்றிருப்பது தமிழக காவல்துறை மீது பெரும் விமர்சனத்தையே முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்றால் மிகையல்ல. மேலும் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் சம்பவங்கள் கூட தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காவல்துறையின் சீருடைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகர் வாட்ஸ்அப் வீடியோ காலில் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக இருந்து பேசும் படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியிடம் தவறான தொடர்பு வைத்துள்ளார் என்று திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் மீது தமிழக காவல் துறை இயக்குனர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி 15 நாட்களை நெருங்கும் நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் இன்று ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்படி இளம் பெண்ணின் கணவர் புகார் மனு மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை குற்றச்சாட்டும் தற்போது தொடர்ந்து வருகிறது. ஆகவே பாலியல் தொடர்பான புகார்களில் பாரபட்சமின்றி சிவசங்கர் பாபா உட்பட பல பாலியல் குற்றவாளிகள் மீது எடுத்த நடவடிக்கை போல வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாக நிர்வாண நிலையில் பேசி காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் முனி சேகர் மீது அப்பெண்ணின் கணவரின் புகாரிலாவது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்துறை தங்களின் நடுநிலையை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்திகள் : ஐசக் அலி, விசாகப்பட்டினம்
#visilmedia #todaynewstamil #topnews #news #tamilnadupolice #police #crime