கிருஷ்ணகிரி மாவட்டம் கேகே பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிக்குமார், இவருக்கும் அங்கினாயனபள்ளியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது , இவர்கள் பணி நிமித்தமாக கோயமுத்தூரில் வசித்து வந்துள்ளனர், இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையை சிசுக் கொலை பண்ண சொல்லி முனிக்குமார் பிரச்சனை செய்துள்ளார், இந்த பிரச்சனையை காவல் நிலையம் வரை சென்று அங்கு போலீசார் முன்னிலையில் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 6 வருடமாக சமாதானமாக இருந்து வந்த நிலையில் தற்போது பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தை என்பதால் அதே பிரச்சினையைத் தொடர்ந்து செய்துள்ளார், ஒரு காலகட்டத்தில் குழந்தையை கொலை செய்ய தானே முன்வந்து கத்தியை எடுத்து முனி குமார் குழந்தையை குத்தியுள்ளார், எதிர்பாராத விதமாக தாய்பிரியா குழந்தையை தூக்கி காப்பாற்றிய போது தொடையில் கத்திக்குத்து விழுந்துள்ளது, இந்நிலையில் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்து உள்ளது என்றும் அதைக் கொலை செய்துவிட வேண்டுமென்று பிரச்சனை செய்து விட்டு தன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி சென்றுவிட்டார். இவரது மனைவி பிரியா கணவன் திரும்பி வருவார் என்று பல நாட்களாக காத்திருந்து எந்த பயனும் இல்லாமல் , முனிகுமாரை தேடி கிருஷ்ணகிரியில் உள்ள தனது கணவன் வீட்டுக்கு சென்றுள்ளார் இந்நிலையில் அங்கு இருந்த கணவரின் சகோதரன் முனிரத்தினம் பெண் குழந்தை நம்முடைய குடும்பத்திற்கு ஆகாது என்றும் அதை கொன்றுவிட வேண்டும் என்று அவரும் வற்புறுத்தியுள்ளார், புட்டி பாலில் விஷம் வைத்து கொன்று விடலாம் என்று சொன்னதின் பேரில் பிரியாவுக்கும் கணவருடைய தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது நிலையில் பிரியாவை தேடி வந்த அவர்களது தம்பிகளுக்கும் முனி குமார் மற்றும் முனிரத்தினம் ஆகியோருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த முனிரத்தினம் பிரியாவின் தம்பிகளான யோகானந்த் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் உருட்டுக்கட்டையினாலும் கம்பியினாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் தடுக்க சென்ற பிரியாவையும். கணவரும் அவருடைய தம்பியும் சேர்ந்து தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக் கொலையை தடுப்பதற்கு தமிழக அரசு எவ்வளவு சட்டங்கள் கொண்டு வந்தாலும், இந்த மாதிரி கேவலமான ஈனப்பிறவிகளால் ஒரு சில இடங்களில் பெண் சிசுக் கொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இப்படிப்பட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்ட முனிக்குமார் மற்றும் முனிரத்தினம் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. பெண் சிசு கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #crime #krishnagiri #tamilnadu #செய்திகள் #பெண்சிசுக்கொலை