*விழுப்புரம: அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவருடைய மகன் எம்பியுமான கௌதம் சிகாமணி இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் மூன்று மணி நேரமாக காத்திருப்பு*
*கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவருடைய மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் ஆஜராயினர் இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான நகலை வழங்குவதற்காக இரண்டு முறை உள்ளே அழைத்து பின்பு காத்திருக்க வைத்துள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் வராண்டாவில் கடந்த மூன்று மணி நேரமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் காத்து உள்ளனர்
#visilmedia #todaynewstamil #topnews #news #tamilnadu #education #highcourt #செய்திகள் #உயபொன்முடி