ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்திய எதிரிகள் 3 பேர் கைது – 8 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.*
*அதன்படி இன்று ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. லெட்சுமிபிரபா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. இன்னோஸ்குமார், திரு. முகம்மது பைசல், முதல் நிலைக் காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. ராம்பிரகாஷ், காவலர்கள் திரு. சதீஷ், திரு. குணசுந்தர் மற்றும் திரு. சுந்தரபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (04.10.2021) ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்பலாபாத் பேரூந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர்களான மந்திரமூர்த்தி மகன் 1) சங்கரன் (எ) சங்கரசுப்பு (26), மாரிமுத்து மகன் 2) ராமசாமி (26) மற்றும் பரமசிவன் மகன் 3) நம்பிகணேஷ் (27) என்பதும், அவர்கள் காரில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சாவையும், கடத்துவதற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #thoothukudi #police #drugs #செய்திகள் #crime #கஞ்சா #தூத்துக்குடி