தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தூத்துக்குடி சிப்காட்டில் இரண்டாம் கட்ட நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் மட்டும் 235 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. கையகப்படுத்தும் நிலத்திற்கு அரசு தரப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 14 லட்சம் ரூபாய் கொடுக்க நிா்ணயம் செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் தரப்பில் இந்த பகுதியில் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் விற்பனையாவதால் தங்களுக்கு அரசு குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 30 லட்ச ரூபாயாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மிரட்டி பணிய வைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் கண்டன பேனர் வைத்து கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் நாளை முதல் சுற்று வட்டார கிராமங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #thoothukudi #செய்திகள் #strike #ஆர்ப்பாட்டம் #தூத்துக்குடி