மருத்துவம்

மக்களே!! மழைக்காலம் கவனம்!! டெங்கு காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்!! – அன்புமணி

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு காய்ச்சலானது பகலில் கடிக்கும் ஏடீஸ் எனும் கொசுவால் ஏற்படுகிறது. இந்த கொசு கடித்தவுடன் உடலில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதை கவனிக்காமல் விட்டால் மரணிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் வீட்டை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்!

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும்!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்! டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

பப்பாளி சாறு
நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்! என தொடர் பதிவில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #dengue #anbumani #தமிழ்நாடு #செய்திகள் #டெங்குகாய்ச்சல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button