மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி(90) என்பவர் கணவனை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அசரப்அலியுடன் வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாடு சென்றதும் மருமகள் கடந்தவாரம் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். அதே ஊரில் வசித்துவரும் தனது பெரிய மகனிடம் பீவி சென்றார் அவரும் விரட்டிவிடடார், மகள் வீட்டிற்கு சென்றவரை அவரும் ஏற்றுகொள்ளவில்லை, வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் கூறியதற்கும் மகன்கள் கேட்கவில்லை, குவைத்தில் இருக்கும் அசரப்அலியும் என்வீட்டில் அவர் இருக்கக்கூடாது என்றார். அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்த நிலையில்.
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு என்னை என் பிள்ளைகள் ஏற்றுகொள்ளவில்லை, என் வீட்டை பிடுங்கி அதில் வீடுகட்டி வசித்துவருகின்றனர். ஒருவேளை உணவு கொடுக்க விருப்பம் இல்லாமல் துரத்திவருகின்றனர். என் இறுதிகாலத்தில் நான் வேதனையை அனுபவித்துவருகிறேன், ஆகவே என் வீட்டை மீட்டு எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுங்கள் அந்த வீட்டை விற்று பணத்தை வங்கியில்போட்டு நான் எனது இறுதிகாலத்தை கழிக்கிறேன், அப்படி இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் லலிதா உடனடியாக மயிலாடுதுறை ஆர்டிஓ பாலாஜி மூலம் மூத்தமகன் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். குடும்பத்தாரை அழைத்து நிரந்தரதீர்வு ஏற்படுத்துகிறேன் என உறுதி அளிதுள்ளார்.
செய்தியாளர் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை
#visilmedia #todaynewstamil #topnews #news #தமிழ்நாடு #சிரந்தசெய்திகள்